வாஜ்பாய் அமைச்சரவையில் மிகவும் சக்தி வாய்ந்த பெண் அமைச்சராக திகழ்ந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு அத்வானி உள்ளிட்ட பல மூத்தத் தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். இதேபோல், சுஷ்மா ஸ்வாராஜூம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகினார். மோடிக்கு நெருக்கமானவர்களுக்கு அமைச்சரவையிலும் கட்சியிலும் முக்கிய பொறுப்புகள் தரப்பட்டது. அதேபோல் ஸ்மிருதி இராணிக்கு தற்போது மக்களவையில் முன் இருக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
ராகுலை வென்ற ஸ்மிருதிக்கு பாஜக செய்த மரியாதை! - மோடி
டெல்லி: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு மக்களவையில் பாஜக முக்கியத்துவம் அளித்துள்ளது.
ஸ்மிருதி இராணி
பொதுவாக மூத்தத் தலைவர்களுக்கும், மிகவும் அனுபவம் வாயந்த நாடாளுமன்றவாதிகளுக்கும்தான் முன் இருக்கை அளிப்பது வழக்கம். ஆனால், முதல்முறை மக்களவைக்கு தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள ஸ்மிருதி இராணிக்கு மக்களவையில் முன் இருக்கை தரப்பட்ட சம்பவம் ஸ்மிருதியின் முக்கியத்துவத்தை குறிக்கும்படி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸின் பாரம்பரிய தொகுதியான அமேதியில் ராகுல் காந்தியை தோற்கடித்தவர் ஸ்மிருதி இராணி என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Aug 1, 2019, 10:41 PM IST