தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விசாகப்பட்டினத்தில் சீர்மிகு நகரங்கள் தேசிய கருத்தரங்கம்! - SMART CITIES CONFERENCE

விசாகப்பட்டினம் : சீர்மிகு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.

SMART CITIES CONFERENCE IN VISAKHAPATNAM
SMART CITIES CONFERENCE IN VISAKHAPATNAM

By

Published : Jan 24, 2020, 5:20 PM IST

ஆந்திராவின் கடற்கரை நகரமான விசாகப்பட்டினத்தில் நாட்டின் சீர்மிகு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) குறித்து இரண்டு நாட்கள் கருத்தரங்கம் இன்று (ஜன24) தொடங்கியது. இந்த கருத்தரங்கம் நாளைவரை இரண்டு நாட்கள் நடக்கிறது. நாட்டின் நகரங்களை, சீர்மிகு நகரமாக தரம் உயர்த்தும் வகையில் மக்களுக்கான நகரங்களை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் சிறந்து விளங்கும் நகரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில், ஆந்திராவின் புதிய தலைவநகராக உருவாகிவரும் அமராவதிக்கு செயல்பாட்டு விருதும், மிதக்கும் சூரிய தகடுகள் அமைத்த விசாகப்பட்டினம் நகருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

விசாகப்பட்டினத்தில், சீர்மிகு நகரங்கள் தேசிய கருத்தரங்கம்!
குஜராத் மாநிலத்தின் சூரத் நகருக்கு, சிறந்த நகருக்கான விருது கிடைத்தது. சீர்மிகு நகரங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் துரித நகரங்களின் தலைமை செயல் அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: தடுப்பூசி மருந்து கேட்ட மாலத்தீவு: உதவிய இந்தியா!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details