உலகளவில் இன்று கொண்டாடப்படும் இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள இளையோருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்துகளை கூறினார்.
திறன் இந்தியா மிஷன் : நாட்டின் இளைஞர்களிடையே தொழில் முனைவோராகும் எண்ணத்தை அதிகப்படுத்தியது! - ஆத்ம நிர்பார் பாரத்
டெல்லி : நாட்டின் இளைஞர்களிடையே தொழில் முனைவோராகும் எண்ணத்தை அதிகப்படுத்தியதில் திறன் இந்தியா மிஷன் முக்கிய பங்கு வகிக்கிறதென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
திறன் இந்தியா மிஷன் : நாட்டின் இளைஞர்களிடையே தொழில் முனைவோராகும் எண்ணத்தை அதிகப்படுத்தியது!
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த ஐந்து ஆண்டுகளில், இளைஞர்களிடையே தொழில் முனைவோர் உணர்வை அதிகரிப்பதில் திறன் இந்தியா மிஷன் முக்கிய பங்கு வகித்துள்ளது. வேலை வாய்ப்பை தேடுபவர்களை வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாக ஊக்குவிப்பதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்ம நிர்பார் பாரத்தின் நீண்ட தூரம் பயணத்தை விரைவில் வெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்"என பதிவிட்டுள்ளார்.