தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

100 விழுக்காடு வருகையை பதிவு செய்த திமுக உறுப்பினர்! - 100 விழுக்காடு வருகையை பதிவு செய்த திமுக உறுப்பின

ஹைதராபாத்: மாநிலங்களவையில் 100 விழுக்காடு வருகையை பதிவு செய்த திமுக உறுப்பினர் வில்சனுக்கு குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Wilson
Wilson

By

Published : Mar 2, 2020, 11:27 PM IST

நாடாளுமன்ற முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் ஜனவரி 31ஆம் தொடங்கிய நிலையில், இரண்டாவது கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்திருந்தார்.

நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் 100 விழுக்காடு வருகையை பதிவு செய்த ஆறு உறுப்பினர்களுக்கு இன்று குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மாநிலங்களவையில் வாழ்த்து தெரிவித்தார். திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் வில்சன், பாஜகவைச் சேர்ந்த ராகேஷ் சின்ஹா, சமாஜ்வாதி கட்சியின் ரவி பிரகாஷ் வர்மா, காங்கிரஸ் கட்சியின் ஹனுமந்தயா, அகிலேஷ் பிரசாத் சிங், பிஜு ஜனதா தளத்தின் சஸ்மித் பாத்ரா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம், சட்டம், நீதி ஆகியவைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் திமுகவைச் சேர்ந்த வில்சன் உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தடுப்புக் காவலில் உமர் அப்துல்லா - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details