உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் இன்று (நவ.2) அதிகாலை, சரக்கு வாகனம் ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சரக்கு வாகனத்தில் சென்றவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 10 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். மீதமுள்ளவர்களில் மூன்று பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.