தெலங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் ஆறு பேரை காவலர்கள் கைது செய்தனர். ஆயுதங்கள் வைத்திருந்ததற்காகவும், அதைவைத்து மக்களிடம் மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவிக்கின்றனர்.
ராஜண்ணா சிர்சில்லா மாவட்ட எஸ்பி ராகுல் ஹெக்டே பேசுகையில், கைது செய்யப்பட்டவர்கள் சுதாகர்(50), லிங்கய்யா(56), அஞ்சய்யா(40), தேவய்யா(40), கோவர்தன்(26), விட்டல்(30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் ஆறு பேரும் சிபிஐ(எம்எல்) ஜனசக்தி ராமச்சந்திரம் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருக்கின்றனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.