இந்திய - திபெத் எல்லையை பாதுகாக்கும் பணியை Indo-Tibetan Border Police எனப்படும் இந்தோ - திபெத் எல்லைக் காவல்படை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், இன்று காலை வீரர்களுக்கிடையே நடைபெற்ற வாக்குவாதம் முற்றியதில், ரெஹ்மான் கான் என்ற வீரர் அருகிலிருந்த எல்லைப் பாதுகாப்பு வீரர்களை நோக்கி திடீரென்று தன் துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்.
இதில் ஆறு பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த வீரர்கள் ராய்பூரிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூடுக்கு காரணமான ரெஹ்மான் கானும் இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் கூறுகையில், "இது மிகவும் துரதிருஷ்டமான ஒரு நிகழ்வு. பலியானவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், அவர் (ரெஹ்மான் கான்) மன அழுத்தத்தில் இருந்தாரா என்பது குறித்தும் விசாரிக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
எல்லைக் காவலர்களுக்கு இடையே நடைபெற்றத் துப்பாக்கிச் சூடு இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, இதுகுறித்து விசாரிக்க ராணுவ உயர் அலுவலர்கள் சத்தீஸ்கருக்கு விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கடற்படை தினம் 2019 - கடற்படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மோடி ட்வீட்!