மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாகக் கருதப்படும் ஆறு பேரை பெலியகட்டா மருத்துவமனையில் தனிமைப்படுத்தி அம்மாநில சுகாதாரத் துறை கண்காணித்துவருகிறது.
மேலும், அவர்களுடன் தொடர்பிலிருந்த 1,997 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மேற்குவங்கத்தில் யாரும் கோவிட்-19 ஆல் பாதிக்கப்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட ஆறு பேரில் மூன்று இந்தியர்கள், பெரு நாட்டைச் சேர்ந்த ஒருவர் இத்தாலிய நாட்டைச் சேர்ந்த தம்பதி உள்ளனர்.
கொல்கத்தா, பக்டோக்ரா விமான நிலையத்திற்கு வந்த 67ஆயிரத்து 761 பயணிகளுக்கு கோவிட்-19 தொற்று இருக்கிறதா என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. நேபாளம், வங்க தேசம் நாட்டிலிருந்து தரைவழி மார்க்கமாக மேற்கு வங்கத்துக்குள் நுழையும் ஏழு இடங்களில் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 153 பேருக்கு கோவிட்-19 தொற்று குறித்து சோதனை செய்யப்பட்டுள்ளது.