தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி. லாரி விபத்து: 6 விவசாயிகள் உயிரிழப்பு! - Six farmers killed in road accident

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி விபத்தில் ஆறு விவசாயிகள் உயிரிழந்தனர்.

six-farmers-killed-in-road-mishap-in-ups-etawah
six-farmers-killed-in-road-mishap-in-ups-etawah

By

Published : May 20, 2020, 12:59 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள எடாவா மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு விவசாயிகள் காய்கறிகளை சந்தையில் விற்பனை செய்த பின், மினி லாரியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி ஒன்று மினி லாரி மீது மோதியது. இந்த விபத்தில் ஆறு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து எடவா காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் தோமருக்கு தகவலளிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் இடம் விரைந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை உடற் கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:இன்று கரையைக் கடக்கும் ஆம்பன் புயல்; ஒடிசாவில் 102 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று

ABOUT THE AUTHOR

...view details