பெங்களூரு இந்திரா நகர், மைகோ லேஅவுட் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அந்தநகர காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று காலை அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட பெங்களூரு காவல் துறையினர், நான்கு கஞ்சா வியாபாரிகள் கைது செய்தார்.
அவர்களிடமிருந்து 44 கிலோ எடை கொண்டு கஞ்சா மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பேருந்து மூலம் கஞ்சா வந்ததும், அதனை இந்திராநகர், மைகோ லேஅவுட் பகுதிகளில் விற்க திட்டமிட்டிருந்தததும் தெரியவந்ததது.
இதுதொடர்பாக பெங்களூரு குற்றப் பிரிவு கூடுதல் ஆணையர் சந்தீப் பாட்டில் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, "குற்றப் பரிவு காவல் துறையினர் ஆறு கஞ்சா வியாபாரிகளைக் கைது செய்துள்ளனர். 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுரிகள் அருகே இவை விற்கப்பட்டு வந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் விலை ரூ.23 லட்சம் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : டெல்லி வன்முறை பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் - ராகுல் காந்தி