தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 11, 2020, 5:04 PM IST

ETV Bharat / bharat

மணிப்பூரில் ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா

இம்பால் : மணிப்பூரில் ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளதாக அக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஓ ஹென்றி சிங் தெரிவித்துள்ளார்.

manipur
manipur

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 28 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாகத் திகழ்ந்தது. இருப்பினும், 21 தொகுதிகளில் வென்ற பாஜக, நாகா மக்கள் முன்னணி (4), லோக் ஜனசக்தி (1), தேசிய மக்கள் சக்தி (4), திரிணாமுல் காங்கிரஸ் (1) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. பாஜகவின் பைரன் சிங் முதலமைச்சராக பதவியேற்றார்.

தொடர்ந்து பாஜகவை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக வெளியானது. இதனையடுத்து, அம்மாநில முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மாநில முதலமைச்சர் பைரன் சிங் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். இதனிடையே, மணிப்பூர் சட்டப்பேரவையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 53 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் மூவர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நான்கு எம்.எல்.ஏக்களின் பதவிகள் பறிக்கப்பட்டன.

இந்நிலையில், பரபரப்பான சூழலில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றிபெற்றது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத ஆறு எம்.எல்.ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சபநாயருக்கு அனுப்பியுள்ளனர். இவர்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அப்போது, நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் கொறடா உத்தரவிட்ட போதிலும், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத காரணத்தால் எட்டு எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details