இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் அமைச்சர் ஹர்ஷவர்தன், " கோவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் சேர்ந்து மத்திய அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கோவிட்-19 நோய்க்கு எதிராகப் போராட்டத்தில் இந்தியா முன்னேறி வருகிறது. முன்னர் ஹாட்ஸ் ஸ்பாட்டுகளாக (அதிகம் பாதிக்கப்பட்டதாக) அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது.
வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் ஊரடங்கையும், தொற்று கட்டுப்படுத்தல் யுத்திகளையும் முறையாக அமல்படுத்த வேண்டும். தனிமைப்படுத்தல் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான படுக்கைகளையும், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளைத் தேவையான அளவில் வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.