தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிதிப் பிரச்னை குறித்து மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா ஆலோசனை - coronavirus sitharaman latest

டெல்லி: கரோனா பெருந்தொற்று காரணமாக மாநிலங்கள் சந்தித்து வரும் நிதிப் பிரச்னைகள் குறித்து, அந்தந்த மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

sitharaman
sitharaman

By

Published : Apr 20, 2020, 7:27 PM IST

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அஸ்ஸாம் நிதி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமாந்த் பிஸ்வாஸ் ஷர்மா, "மாநிலங்கள் சந்தித்து வரும் நிதிப் பிரச்னை குறித்து அந்தந்த மாநில நிதி அமைச்சர்களுடன் காணொலி மூலம் தான் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னிடம் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள 4.25 லட்சத்துக்கும் அதிகமான அஸ்ஸாமியர்களை தொலைபேசி, இணையதளம் மூலம் தொடர்பு கொண்டோம். அவர்களின் குடும்பத்துக்கு இரண்டு ஆயிரம் முதல் 86 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கியுள்ளோம். வரும் நாட்களில் அவர்களுக்கு மேலும் பண வழங்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க : ஊழியர்களின் ஊதியத்தைக் கட் செய்ய ஏர்ஏசியா முடிவு

ABOUT THE AUTHOR

...view details