மத்திய வரவு-செலவுத் திட்ட அறிக்கை 2021-22 க்கு முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர்மட்ட தொழிலதிபர்களுடன் வரவு-செலவுத் திட்ட அறிக்கைக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வரும் நிதியாண்டிற்கான, வரவு-செலவுத் திட்ட அறிக்கை குறித்து முதல் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. காணொலி மூலம் நடைபெற்ற இக்கூட்டத்தில், பங்குதாரர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு 2021 - 22 நிதியாண்டிற்கான, வரவு-செலவுத் திட்ட அறிக்கை குறித்த ஆலோசனை செய்தனர்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வரவு-செலவுத் திட்ட அறிக்கைக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில், மத்திய நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் பிப்ரவரி ஒன்றாம் தேதி வரவு-செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல்செய்கிறார்.
வரவு-செலவுத் திட்ட அறிக்கைக்கு முந்தைய இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தனது வரி சார்ந்த பரிந்துரைகள் உள்ளடக்கிய வரவு-செலவுத் திட்ட அறிக்கை தயாரிப்புப் பணியைத் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா தொடங்குவார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க: மனு எங்கே உள்ளது? பிரக்யா பேச்சில் உள்ளது என்கிறார் திருமா!