நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கலையொட்டி அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் - சீதாராம் யெச்சூரி
டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று நடக்கவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
parliament
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்கு பதில் அக்கட்சியைச் சேர்ந்த ராகவ் சாதா பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது