உத்தரப் பிரதேசம் மாநிலம் பல்லியாவில் மகாகல்பூர் கிராமத்தில் உள்ள பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா மாவட்ட துணைத் தலைவர் பானு துபேவின் இல்லத்தில் அவரது மகன் பிறந்தநாள் விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
பாஜக பிரமுகரின் மகன் பர்த்டே பார்ட்டியில் துப்பாக்கிச் சூடு - பாடகர் காயம்! - மகாகல்பூர் பாஜக பிரமுகர் வீட்டில் துப்பாக்கி சூடு
லக்னோ: பல்லியாவில் பாஜக நிர்வாகியின் மகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, பாடகர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போஜ்புரியைச் சேர்ந்த பாடகர் கோலு ராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் சமயத்தில், கூட்டத்தில் இருந்த நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். ஒரு குண்டு ராஜாவின் வயிற்றிலும், மற்றொரு குண்டு கையிலும் பாய்ந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த பாடகர், உடனடியாக அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட காணொலி காட்சிகளை ஆய்வு செய்துவருகின்றனர். உரிமம் பெற்ற துப்பாக்கியிலிருந்துதான் குண்டு பாய்ந்துள்ளதாக காவல் துறையினர் தரப்பில் கூறுகின்றனர்.