குரங்குகள் அவ்வப்போது சேட்டையான சில விளையாட்டுகளை மேற்கொள்ளும் என்றாலும் குரங்குகள் கூட்டமாக இணைந்தால், அவற்றின் செயல்கள் பெரும் ஆபத்தில் முடியலாம். இதுபோன்ற ஒரு நிகழ்வுதான் தெலங்கானா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்திலுள்ள ஷோபனாட்ரிகுடெம் என்ற கிராமத்தில் கடந்த புதன்கிழமை சுமார் 30 ஆட்டுக்குட்டிகளை அங்கிருந்த குரங்கு கூட்டம் ஒன்று கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குரங்கு அச்சுறுத்தலுக்கு இழிவான இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆட்டு மந்தையை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற ஆடு மேய்ப்வர் சுமார் 30 ஆட்டுக்குட்டிகளை ஆட்டு கொட்டகையிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளார். அப்போது, அப்பகுதிக்குவந்த சுமார் 30 குரங்குகள் அந்த ஆட்டுக் கொட்டகையை தாக்கத் தொடங்கியது. அக்கம் பக்கத்தினர் இந்த குரங்குகளை விரட்ட முயன்றனர்.
இருப்பினும், வீடு முடப்பட்டிருந்ததால், அவர்களால் வீட்டினுள் நுழைய முடியாவில்லை. அங்கிருந்த 30 ஆடுகளை கொடூரமாக கடித்து குரங்களை கொன்றுவிட்டது. தெலங்கானா மாநிலத்தில் குரங்குகளின் அச்சுறுத்தல் காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக சூர்யாபேட் உள்ளது.
அப்பகுதியிலுள்ள குரங்கு கூட்டம் அங்கிருக்கும் வீடுகளுக்குள் நுழைந்து பொருள்களை திருடிவருகிறது. குரங்குகள் பொதுமக்களை கடிக்கும் சம்பவங்களும் சில சமயம் அரங்கேறியுள்ளது. குரங்குகளின் தாக்குதலைத் தவிர்க்க சில கிராமங்களிலுள்ள கடைக்காரர்கள் பெரிய புலி பொம்மைகளை வைத்துள்ளனர்.
மேலும், வடக்கு தெலங்கானாவில் உள்ள பெட்டப்பள்ளி போல கரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குரங்கு சரணாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு குரங்குகளுக்கு தேவையான பழங்கள் கிடைப்பதால், அவை பொதுமக்களை தாக்குவதில்லை.
இதையும் படிங்க:பாஜகவில் இணைந்த 24 மணி நேரத்திற்குள் அரசியலைவிட்டே விலகிய முன்னாள் கால்பந்து வீரர்!