ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போதிலிருந்தே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், சச்சின் பைடல் ஆகியோருக்கிடையே கருத்து வேறுபாடு நிலவிவருகிறது. முதலமைச்சர் பதவி விவகாரத்தில் இது முற்றியதைத் தொடர்ந்து, முதலமைச்சர் பதவி அசோக் கெலாட்டுக்கும் துணை முதலமைச்சர் பதவி சச்சின் பைலட்டுக்கும் வழங்கப்பட்டது.
இருப்பினும், பல விவகாரங்களில் இவர்களுக்கிடையே மோதல் நிலவிவந்தது. மத்தியப் பிரதேச காங்கிரஸ் முகமாக இருந்துவந்த ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியிலிருந்து விலக பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அடுத்த விக்கெட் சச்சின் என கூறப்பட்டுவந்தது. இதனிடையே, ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடைபெற்றுவருவதாகக் கூறி சச்சின் பைலட் உள்பட் பலருக்கு மாநில உள்துறை அமைச்சகம் அனுப்பிய நோட்டீஸ் அனுப்பப்பட்டது.