இந்தியாவின் வட எல்லையில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே பல இடங்களில் இன்னும் எல்லை இன்னும் வரையறுக்கப்படவில்லை. எல்லை வரையறை செய்யப்படாத பகுதிகளில் நிர்வாக முக்கியத்துவம் இடங்களை சீனா பிடிவாதமாக தன்னுடைய கட்டுக்குள் கொண்டுவர விரும்புகிறது.
இதனால் அருணாசல பிரதேசம் சிக்கிமில் பல இடங்களில் எப்பொழுதும் பதற்றம் நிலவிவருகிறது. இந்திய-சீன எல்லையான சிக்கிம் பகுதியில் இந்திய வீரர்களுக்கும், சீன வீரர்களுக்கும் நகு லா பகுதியில் இன்று மோதல் ஏற்பட்டது. இந்திய - சீன வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கினார்கள்.
கற்களை எடுத்தும் வீசினார்கள். இந்த கைகலப்பில் இரு தரப்பிலும் மொத்தம் 150 பேர் ஈடுபட்டதாக தகவல் கிடைத்துள்ளது. எல்லைப் பகுதியில் காவலில் இருந்த வீரர்கள் இடையே இந்த மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலில் நான்க் இந்திய வீரர்களுக்கும், ஏழு சீன வீரர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேச உடனே இருநாட்டு ராணுவ அலுவலர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அங்குப் பதற்றம் குறைந்தது. இது குறித்து ராணுவ அலுவலர் ஒருவர் நமது ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “இந்திய - சீன எல்லையான சிக்கிம் பகுதியில் எல்லைப் பிரச்னை நிலவுவதால், இது போன்ற மோதல்கள் அவ்வபோது நடக்கின்றன.