தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிக்கிம் மாநிலத்திற்கு 17வது கர்மாபா வருகை தர ஏற்பாடு செய்ய வேண்டும் - சிக்கிம் முதல்வர் பிரதமருக்கு கடிதம்! - கர்மா கக்யு பள்ளி தலைவர்

திபெத்திய பௌத்த மதத்தின் 900 ஆண்டு பழமையான கர்மா கக்யு பள்ளியின் தலைவரான 35 வயதான 17வது கர்மாபா ஓகியன் டிரின்லி டோர்ஜே, இந்தியா திரும்புவதற்கு உதவி செய்யுமாறு சிக்கிம் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மா எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம்.

நேபாள்
நேபாள்

By

Published : Aug 13, 2020, 10:31 PM IST

உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவுடன் நடந்து வரும் பதட்டமான நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இருந்து வரும் திபெத்திய பௌத்த மதத்தின் 900 ஆண்டு பழமையான கர்மா கக்யு பள்ளியின் தலைவரான 35 வயதான 17வது கர்மாபா ஓகியன் டிரின்லி டோர்ஜே, இந்தியா திரும்புவதற்கு உதவி செய்யுமாறு சிக்கிம் முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவரது சந்தேகப்படும்படியான நோக்கங்கள் குறித்து இந்திய அதிகாரிகளால் கடந்த காலங்களில் விசாரிக்கப்பட்டது. 20 இந்திய வீரர்களின் உயிர் இழப்புக்கு வழிவகுத்த கல்வான் வன்முறையை அடுத்து இந்திய-சீனா உறவுகள் கடுமையாக மோசமடைந்ததைத் தொடர்ந்து, இந்தியா தனது பாதுகாப்பு நிலையை முடுக்கிவிட்டு, சீனாவுடனான வர்த்தகத்தை துண்டிக்கப் போவதாக கூறி, ஹாங்காங்கின் ராஜதந்திர ரீதியாக மாற்றத்தை பற்றி பேசி, திபெத் மற்றும் தைவானுடனான அதன் உறவுகளை மீண்டும் தொடர உள்ளது.

ஜூலை 18ஆம் தேதி முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் அது எழுதப்பட்ட காலத்தினால் முக்கியத்துவம் பெறுகிறது. “சிக்கிமின் பக்தர்கள், 17வது கர்மாபா ஓகியன் டிரின்லி டோர்ஜியை நேரில் தரிசனம் செய்ய விரும்புகிறார்கள் என்பதை தாங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். சிக்கிமியர்கள் அனைவரும் அவரது சிக்கிம் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், ”என்று தமாங் கடிதத்தில் எழுதியுள்ளார்.

17வது கர்மாபா 2000ஆம் ஆண்டில் திபெத்திலிருந்து தப்பித்ததைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவருக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்தார். இந்திய புலனாய்வு அமைப்புகளால் ‘சீன உளவாளி’ என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவருக்கு ஒரு முறை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்னர், கர்மாபா லாமா சிக்கிமுக்கு செல்வது உட்பட நாடு முழுவதும் சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்பட்டார்.

"அதிருஷ்டவசமாக, தொடர்ச்சியான பொதுக் கோரிக்கையைத் தொடர்ந்து ரும்டெக் மடாலயத்தைத் தவிர, அவரது நடவடிக்கைகளுக்கான இந்த கட்டுப்பாடுகள் 2018ஆம் ஆண்டில் நீக்கப்பட்டன. இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடந்த 2018ஆம் ஆண்டில் உங்கள் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தால் அகற்றப்பட்டதற்கு நானும் எனது சக சிக்கிமியர்களும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பக்தர்கள் அவர்களின் நேசத்துக்குரிய ஆன்மீக விருப்பங்களுக்கு, அவரது சிக்கிம் வருகைக்காக எனது அரசாங்கத்தை இப்போது அணுகி வருகிறார்கள், ”என்று முதலமைச்சர் தமாங் கடிதத்தில் எழுதியுள்ளார்.

தலாய் லாமா மற்றும் சீனா இருவரும் ஓகியன் டிரின்லி டோர்ஜை 17வது கர்மாபாவாக அங்கீகரிக்கின்றனர். இந்தியா அவரது போட்டியாளரான தெய் டிரின்லி டோர்ஜை நீண்ட காலமாக அங்கீகரித்தது, ஆனால் தலாய் லாமாவுக்கு பிந்தைய சூழ்நிலையில், திபெத்திய புலம்பெயர்ந்தோரின் செல்வாக்கு இருப்பது கர்மாபா லாமாவிற்கு தான்.

கடந்த மூன்று ஆண்டுகளில், தலாய் லாமா மற்றும் திபெத்திற்கான தனது ஆதரவை மத்திய திபெத்திய நிர்வாகத்தின் பிரதிநிதிகள் மற்றும் சீன அதிருப்தியாளர்களுடன் மேடையில் பகிர்ந்து கொள்வதன் மூலம் கர்மாபா அடையாளம் காட்டியுள்ளார். தர்மசாலாவில் தலைமையிடத்துடன் வெளியேற்றப்பட்ட 17வது கர்மாபா மீதான தங்கள் நம்பிக்கையை திபெத்திய அரசாங்கம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த 2018ஆம் ஆண்டு தர்மசாலாவில் நவம்பரில் நடைபெறவிருந்த திபெத்திய பெளத்தம் குறித்த 13வது மத மாநாட்டில் கலந்து கொள்ள வருவதற்கான நிபந்தனைகள் குறித்து கர்மாபா லாமாவிற்கும் புதுடெல்லிக்கும் இடையில் இழுபறி நீடித்தது. இருப்பினும், நிங்மாபா பாரம்பரியத்தின் ஏழாவது தலைவரான கத்தோக் கெட்சே ரின்போச்சே இறந்ததால் மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.

கர்மாபா லாமா திரும்புவதற்குத் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவில்லை என்றும், இப்போது டொமினிகன் குடியுரிமை பெற்ற கர்மாபா, அதில் வாதம் செய்கிறார் என்றும் இந்திய அதிகாரிகள் கூறியதால் இழுபறி நீடிக்கிறது. முன்னதாக ஒரு இணைய காணொலி மூலம் உரையாற்றிய திபெத்திய விவகாரங்கள் தொடர்பான இந்திய அரசின் ஆலோசகராக பணியாற்றிய RAWவின் முன்னாள் சிறப்பு செயலாளர் அமிதாப் மாத்தூர், “சீனா அவர்களின் தலாய் லாமாவை கொண்டுவருவதற்கு காத்திருக்கிறது. இது தலாய் லாமாவின் விருப்பம் மட்டுமே என்பதை இந்தியா சந்தேகத்திற்கு இடமின்றி கூற வேண்டும்.

இது நாடுகடத்தப்பட்ட திபெத்தியர்களுக்கு நம்பிக்கையளிக்கும். அவரது விருப்பம் குறித்து உடனடியாக அவருடன் இந்தியா கலந்தாலோசிக்க வேண்டும்” என்று கூறினார். இந்திய-சீனா உறவுகளின் பின்னணியில் திபெத்தைப் பற்றி மேலும் பேசுகையில், கர்மாபா லாமா இந்தியாவில் திரும்பி வந்து சுதந்திரமாக வாழ வசதியான சூழல் தேவை என்று அவர் வாதிட்டார், ஏனெனில் அவர் ஏற்கனவே தலாய் லாமாவால் அங்கீகரிக்கப்பட்டு திபெத்தியரின் வளர்ச்சிக்கு பாடுபடுவார் என்று மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார்"

இதற்கிடையில், தமாங்கின் அமைச்சரவையில் அமைச்சர் சோனம் லாமா, சிக்கிமுக்கு வந்து அவரது பக்தர்களை ஆசீர்வதிக்க 17வது கர்மபாவுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளார் என்பது அறியப்படுகிறது.

இதையும் படிங்க:சுதந்திர தின விருந்தினராக நேபாள பிரதமர் ஒலி?

ABOUT THE AUTHOR

...view details