தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகிஸ்தானில் சீக்கிய பெண்கள் மதமாற்றம் - டெல்லியை திணறடித்த சீக்கியர்கள்! - சீக்கிய பெண்கள் மதமாற்றம்

டெல்லி: பாகிஸ்தானில் சீக்கிய பெண்கள் திருமணத்திற்காக கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக வெளியான தகவலை அடுத்து, டெல்லியில் சீக்கிய சமூதாய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தானில் சீக்கிய பெண்கள் மதமாற்றத்திற்கு டெல்லியில் எதிர்ப்பு போராட்டம்!

By

Published : Sep 2, 2019, 1:01 PM IST

பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர் வன்முறைகளும், கட்டாயத்தின் பேரில் மதமாற்றமும் அரகேங்கேறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாகிப்பைச் சேர்ந்த ஜக்ஜித் கவுர்(17) என்ற சிறுமி, கடந்த மாதம் காணாமல் போனதாகக் கூறப்பட்டது. இதனிடையே, சமூக வலைதளங்களில் அந்த சிறுமி இஸ்லாமிய மதத்திற்கு மாறுவது போன்றும், இஸ்லாமியர் ஒருவரை திருமணம் செய்வது போன்றும், வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.

இது குறித்து அந்த சிறுமியின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது தங்கை கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஒரு சீக்கிய பெண் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர்களான சீக்கியர்கள், இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தானில் சீக்கிய பெண்கள் மதமாற்றத்திற்கு டெல்லியில் எதிர்ப்பு போராட்டம்!

இந்நிலையில் இன்று பாகிஸ்தானில் சீக்கிய பெண்கள் மதமாற்றம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் சீக்கிய சமூதாய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அங்கு வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னதாக பாகிஸ்தானில் சீக்கிய பெண்கள் கட்டாய மதமாற்றத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details