உள்கட்சிப் பூசலுக்குப் பேர்போன காங்கிரஸ் கட்சியில் தற்போது அடுத்த பனிப்போர் வெடித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா, கமல்நாத் ஆகியோருக்கு இடையேயும் ராஜஸ்தானில் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையேயும் தொடர்ந்து வார்த்தைப் போர் வெடித்துவருகிறது. இந்தப் பட்டியலில் பஞ்சாபும் தற்போது இணைந்துள்ளது.
பல காலமாக அம்மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங், மூத்தத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துக்கு இடையே பிரச்னை இருந்துவந்தது. இதன் எதிரொலியாகக் கடந்தாண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி துறை மாற்றிய காரணத்தால் அமைச்சரவையிலிருந்து சித்து விலகினார்.