கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, அக்கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து பாஜகவிற்கு தாவினர். இதனால் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சியமைத்தது. இதனையடுத்து அந்த தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டன.
தேர்தல் தோல்வி எதிரொலி: சித்தராமையா ராஜினாமா! - Siddaramaiah resigns as legislative party leader
பெங்களூரு: கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார்.
![தேர்தல் தோல்வி எதிரொலி: சித்தராமையா ராஜினாமா! Siddaramaiah resigns as CLP leader after Congress poor show](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5323362-thumbnail-3x2-sid.jpg)
Siddaramaiah resigns as CLP leader after Congress poor show
இதில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் டிசம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. 12 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றதன் மூலம் அக்கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது. இரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார்.
இதையும் படிங்க... ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தொடரும் மாணவர்கள் போராட்டம்!