சித்த ராமையா
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் உத்தரவின் பேரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கர்நாடக சட்டமன்ற மேலவைத் தலைவராக பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார். சித்த ராமையாவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்க, காங்கிரஸ் நிர்வாகக் குழுவின் உயர்மட்டக் குழுவில் முடிவெடுக்கப்பட்டது.
குற்றச்சாட்டு
கர்நாடகாவில் காலியாகவுள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு வரும் டிசம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை, சித்த ராமையா வழிநடத்தவுள்ளார்.
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியை சித்த ராமையா கடுமையாக விமர்சித்து வருகிறார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முதலமைச்சர் எடியூரப்பா என ஒருவரும் உதவி செய்யவில்லை என அவர் குற்றஞ்சாட்டி வருகிறார்.