காங்கிரஸ் குடும்ப ஆட்சியில்தான் தன்னாட்சி அமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாயின என பிரதமர் மோடி விமர்சித்ததற்கு முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் பிரதமராக முடியும் - பிரதமராக
டெல்லி: பாஜக ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் பிரதமராக முடியும் என கபில் சிபல் விமர்சித்துள்ளார்.
அவர் பேசுகையில், ஆர்.எஸ்.எஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் பாஜக ஆட்சியில் பிரதமராகவோ, முதலமைச்சராகவோ ஆக முடியும் எனவும், நாட்டின் மிகப் பெரிய குடும்பம் ராஷ்டிரிய ஸ்வயம் சேவாக் சங்தான் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு சிலரை தவிர்த்துவிட்டு பார்த்தால் பாஜக ஆட்சியில் இருக்கும் போது வந்த பிரதமர்கள், முதலமைச்சர்கள், ஆளுநர்கள், அமைச்சர்கள் என அனைவரும் ஆர்.எஸ்.எஸ் குடும்பத்தை சார்ந்தவர்கள்தான் என கபில் சிபல் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், விமர்சனத்தில் ஈடுபடுவதை தவிர்த்து விட்டு விவசாயம், மோடி வேலைவாய்ப்பின்மை, தண்ணீர் பற்றாக்குறை, கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் படியும் கேட்டுக் கொண்டார்.