நமது நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களும் கிராமங்களும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பியுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டினால் வரும் அபாயங்கள் குறித்து நாம் உணர்ந்திருந்தாலும், தொடர்ந்து பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்திவருகிறோம். இதனால் பயிர்கள் இல்லாத நிலங்களும் நீர் இல்லாத ஆறுகளும் உருவாகிவருகிறது.
தற்போதுள்ள பிளாஸ்டிக் கழிவுகள், உலகை மூன்று முறை முழுவதுமாக மறைக்க போதுமானதாக உள்ளது என்றதொரு அதிர்ச்சிகரமான தகவலும் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. பிளாஸ்டிக்கை மக்கச் செய்ய தேவையான சூழல் உலகில் இல்லை. இதனால் உலகில் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் எல்லாம் தற்போது வரை மக்காமலேயே உள்ளன.
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களால் வரும் அபாயங்களால் பிரதமர் நரேந்திர மோடி, இதுபோன்ற பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பிரதமரின் இந்த கருத்தால் ஈர்க்கப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தைச் சேர்ந்த பாடலாசிரியர் ஷியாம் பைராகி, பிளாஸ்டிக் பயன்பாட்டால் வரும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பாடலை எழுதி பாடியுள்ளார்.
யார் இந்த ஷியாம் பைராகி?
மாண்ட்லா மாவட்டத்தில் இந்த்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம் பைராகி. இவர் அப்பகுதியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவர் இதுவரை 36 பாடல்களை எழுதியுள்ளார். இவரது அனைத்து பாடல்களும் அரசாங்க திட்டங்கள் குறித்தும் கிராமங்களில் நிலவும் நோய்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
இவர் பல பாடல்களை எழுதி பாடியிருந்தாலும் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து இவர் எழுதியிந்தாலும், 'காடிவாலா ஆயா' என்ற பாடல் நாடு முழுவதும் பிரபலமாகியுள்ளது. குப்பை சேகரிப்பவர்கள் எல்லாம், இவரது இந்த பாடலை ஒலித்தவாரே காலையில் குப்பைகளைச் சேகரிக்கின்றனர்.
இந்த பாடலின் மூலம்தான் இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குஜராத்தில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் நாடு முழுவதுமிருந்து பல்வேறு சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின் 'பிளாஸ்டிக் டாடா டாடா, பிளாஸ்டிக் பை பை' என்ற பாடலையும் ஷியாம் எழுதினார்.
பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடகர் பிளாஸ்டிக் பொருள்களால் மனிதர்கள் விலங்குகள் என அனைவரும் பெரும் ஆபத்து என்று குறிப்பிடும் ஷியாம், பிளாஸ்டிக்கிற்கு எதிராக இப்போது நாம் போராடவில்லை என்றால் கால் இன்ச் சுத்தமான நிலத்திற்கு போராடும் சூழல் விரைவில் ஏற்பட்டுவிடும் என்கிறார்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் இல்லா மாநகராகும் காசியாபாத்!