தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 11, 2020, 4:06 PM IST

ETV Bharat / bharat

'உச்ச நீதிமன்ற ஆணைப்படி பெண்களுக்கான நிரந்தர கமிஷன் உத்தரவு பின்பற்றப்படும்'

பெண்களுக்கு நிரந்தர கமிஷன் வழங்குவது குறித்தான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை, 'அரசு இனி பின்பற்றும்' என மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் மக்களவையில் தெரிவித்தார்.

Shripad Naik says Will follow SC order on commission for women
Shripad Naik says Will follow SC order on commission for women

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான நிரந்தர கமிஷன் அமைப்பது தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த ஸ்ரீபாத் நாயக் இந்த விஷயத்தில் நாங்கள் எந்தப் பாகுபாடும் காட்டமாட்டோம் என்றும்; உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாகப் பின்பற்றுவோம் என்றும் தெரிவித்தார்.

கடந்த மாதம், ஆண் அலுவலர்களைப்போல் பெண்களும் தலைமை தாங்கும் அந்தஸ்துக்குத் தகுதி உடையவர்கள் என்றும்; பெண் அலுவலர்களுக்கும் நிரந்தர கமிஷன் தர ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நாடாளுமன்றத்தில் எம்.பி. சௌகதா ராய், 'இதுவரை ராணுவத்தில் 65 நிரந்தர கமிஷன் அலுவலர்கள், கடற்படைக்கு ஒன்பது பேர், விமானப்படைக்கு 300க்கும் அதிகமான பெண்களே இருக்கின்றனர். இப்படிப்பட்டபோக்கில், எப்படி பாலின சமத்துவம் இருக்கும்?' என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ஸ்ரீபாத் நாயக் தகுதியான பெண்களுக்கு நிரந்தர கமிஷன் அமையும் என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க... ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details