நாடு முழுவதும் கரோனா வைரசின் (தீநுண்மி) தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 25ஆம் தேதிமுதல் நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதால், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்லமுடியாமல் தவித்துவந்தனர்.
கரோனாவின் தீவிரம் காரணமாக ஊரடங்கு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லத் தொடங்கினர். இதனையடுத்து, தொழிலாளர்கள் அவர்களது ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக சிறப்பு ஷ்ராமிக் ரயில்களை மே ஒன்றாம் தேதிமுதல் மத்திய அரசு இயக்கிவருகிறது. இதன்மூலம் சுமார் 52 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களது சொந்த மாநிலம் திரும்பியுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்தது.
இவ்வாறு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பல வழிமாறி வெவ்வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாகவும், ரயில்கள் இயல்பான நேரத்தைவிட மிகவும் தாமதமாக செல்வதாகவும், இதில் பயணிக்கும் தொழிலாளர்களுக்குத் தேவையாக உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருள்கள் ஏதும் வழங்கப்படுவது இல்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. இது சொந்த ஊர் செல்லும் முனைப்பில் உள்ள தொழிலாளர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மேலும் சோர்வடையச் செய்தது.
இந்நிலையில், இது குறித்து ரயில்வே வாரியத்தின் தலைவர் வினோத் குமார் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், "நாடு முழுவதும் இயக்கப்பட்டுவரும் மூன்றாயிரத்து 840 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில், நான்கு ரயில்கள் மட்டுமே தவறுதலாக வேறு மாநிலங்களுக்குச் சென்றுள்ளது. போக்குவரத்துச் சிக்கல் காரணமாக 1.85 விழுக்காடு ரயில்களின் வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்பட்டன.