கரோனா ஊரடங்கினால் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல உதவுமாறு மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கைவிடுத்தனர். இதையடுத்து, சிறப்பு பேருந்துகள் மூலமும், ரயில்கள் மூலமும் வெளி மாநில மக்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டன.
மங்களூருவில் ரயில் தடம் புரண்டு விபத்து
11:35 May 19
பெங்களூரு: வெளி மாநில தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பும் சிறப்பு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
அந்தவகையில், கேரள மாநிலம் திரூரிலிருந்து ஜெய்ப்பூர் நோக்கி வெளிமாநில தொழிலாளர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த ஷ்ராமிக் சிறப்பு ரயில் மங்களூரு அருகில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தென்னக ரயில்வே அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நிலச்சரிவு ஏற்பட்ட குலசேகர் சுரங்கப்பாதைக்குச் சற்று முன்னதாகவே இந்த விபத்து நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'1,000க்கும் மேற்பட்ட ஷ்ராமிக் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன' - இந்திய ரயில்வே