தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீரில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினரை நடந்து சென்று பார்வையிட்ட துணைநிலை ஆளுநர்! - காஷ்மீர் துப்பாக்கி சண்டையில் மூவர் உயிரிழப்பு

காஷ்மீரில்: சோபியனில் துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினரை ஜம்மு காஷ்மீர் ஆளுநர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

ie
miw

By

Published : Oct 9, 2020, 9:18 PM IST

காஷ்மீரில் சோபியன் மாவட்டத்தில், கடந்த ஜூலை 18ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த மூன்று நபர்களின் விவரங்கள், டிஎன்ஏ பரிசோதனை மூலம் தற்போது கண்டறியப்பட்டது. அதன்பின்னர், மூவரின் உடல்களும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்கு உடனடியாக நடத்தப்பட்டன.

இந்நிலையில், ரஜோரி மாவட்டத்தில் பொது வெளியில் உரையாற்றிய ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, அடுத்ததாக அங்கிருந்து அரை கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு தர்காசி கிராமத்தை அடைந்தார். அங்கு, உயிரிழந்த மூன்று இளைஞர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவரிடம் குடும்பத்தினர் முன்வைத்த கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவதாக உறுதியளித்தாகக் கூறப்படுகிறது

ABOUT THE AUTHOR

...view details