தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெங்களூருவில் கொலைக் குற்றவாளி மீது துப்பாக்கிச் சூடு! - கொலைக் குற்றவாளி

பெங்களூரு: கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

Shootout in Bengaluru  Murder accused gets gunshot in Bengaluru  gunshot  பெங்களூரில் கொலைக் குற்றவாளி மீது துப்பாக்கிச் சூடு  கொலைக் குற்றவாளி  பெங்களூரு துப்பாக்கிச் சூடு
Murder accused gets gunshot in Bengaluru

By

Published : Feb 10, 2021, 6:15 AM IST

பெங்களூரு அடுத்த ராஜகோபாலநகர் அருகேயுள்ள கஸ்தூரி நகரைச் சேர்ந்தவர் சீனிவாஸ் (எ) கரி சீனா. கடந்த ஜனவரி 9ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பல் கரி சீனாவை கொலைசெய்தது.

இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய சந்தோஷ் ஜி.டபிள்யூ.கே லேஅவுட் பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

தகவலறிந்து, அங்கு சென்ற காவல் துறையினர் சந்தோஷை கைதுசெய்ய முயன்றபோது அவர் காவலர்களைத் தாக்கியுள்ளார். அப்போது, காவல் உதவி ஆய்வாளர் ஹனுமந்தா ஹதிமணி சந்தோஷ் காலில் துப்பாக்கியால் சுட்டார்.

அதில், படுகாயமடைந்த சந்தோஷை காவல் துறையினர் கைதுசெய்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதையும் படிங்க:திண்டுக்கல்லில் இடத்தகராறால் துப்பாக்கிச் சூடு: தொழிலதிபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details