பஞ்சாப் மாநிலம் லூதியான மாவட்டத்திலுள்ள பஞ்சசீலம் பகுதியில் வசித்து வருபவர் சங்கீதா. இவருக்கு ரோஸல் என்ற இரண்டு வயது பெண்குழந்தையுள்ளது. தனது கணவர் வீட்டில் வசித்து வரும் இவரிடன் ஆண் குழந்தை பெற்றுத்தருமாறு அவரது மாமியார் தர்ஷனா ராணி அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை, சங்கீதா வீட்டில் இல்லாத போது, தர்ஷனா ராணி தனது பேத்தியின் கையை கொதிக்கும் எண்ணெய் கொப்பரைக்குள் விட்டு காயப்படுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் வீடு திரும்பி குழந்தையை கண்டு அதிர்ச்சியடைந்த சங்கீதா, உடனடியாக குழந்தையை மீட்டு அருகிலுள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இதனையடுத்து ஜோத்வேல் பஸ்தி காவல்நிலையத்தில் சங்கீதா தனது மாமியார் மீது புகாரளித்துள்ளார். இதனையடுத்து ராணியை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.