லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று (ஆக.5) சக்திவாய்ந்த வெடி விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தால் மொத்த நகரமும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. கட்டடங்கள் பயங்கரமாக சேதம் அடைந்தன.
இந்த விபத்தில் சிக்கி 78 பேர் உயிரிழந்துள்ளனர். 4,000 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடிவிபத்து செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில், "பெய்ரூட் வெடிவிபத்தின் விளைவாக உயிரிழப்பு நிகழ்ந்து பொது சொத்துகள் சேதமடைந்துள்ளன. இச்செய்தி எனக்கு அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோர், படுகாயம் அடைந்தோரின் குடும்பத்தாருக்காக பிரார்த்திக்கிறேன்" என கூறியுள்ளார்.
பெய்ரூட் வெடிப்பையடுத்து, அங்கு வசித்துவரும் இந்தியர்கள் தங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவையென்றால், குறிப்பிட்ட தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளும்படி, பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் பிதீயடையாமல் அமைதி காக்கும்படியும் தூதரக அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: தகவல்கள் உடனுக்குடன்...!