கல்வான் பள்ளத்தாக்கில் சீனா ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் சீனப் பொருள்களைப் பயன்படுத்துக் கூடாது என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகானும் இக்கருத்தை வழிமொழிந்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "சீனா நடத்திய தாக்குதலுக்கு இந்தியா ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும். மேலும் நம் நாட்டில் உள்ள என் அருமை சகோதர, சசோதரிகள் அனைவரும் சீனா பொருளாதாரத்தின் வளர்ச்சியை உடைக்க வேண்டும். அதன்படி சீனா நாட்டுப் பொருள்களைப் பயன்படுத்துவதைப் புறக்கணித்துவிட்டு, நம் நாட்டுப் பொருள்களை அதிகமாக வாங்கி பயன்படுத்துங்கள்" என்றார்.