கர்நாடகா மாநிலம் சாகர் தாலுகாவைச் சேர்ந்தவர்கள் மம்தா, மது. இவர்கள் இரட்டை சகோதரிகள். 13 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்த இவர்கள் தாயின் அரவணைப்பில் வளர்ந்துவந்துள்ளனர். தன்னம்பிக்கை இருந்தால் லட்சியத்தை அடைந்துவிடலாம் என்பதற்கு இவர்கள் உதாரணமாகத் திகழ்கிறார்கள்.
கர்நாடகாவில் இரட்டையர் சகோதரிகள் சாதனை! - சிவமோகா சகோதரிகள்
பெங்களூரு: காவல் உதவி ஆய்வாளர்களாகி கர்நாடக இரட்டையர் சகோதரிகள் சாதனை படைத்துள்ளனர்.
![கர்நாடகாவில் இரட்டையர் சகோதரிகள் சாதனை! Twins](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:14:11:1605023051-kn-smg-01-psi-sisters-7204213-10112020120207-1011f-1604989927-934-1011newsroom-1604996597-687.jpg)
Twins
லாவிகிரி கிராமத்தைச் சேர்ந்த லிங்கப்பா பாக்கியம்மா தம்பதியரில் நான்கு குழந்தைகளில் இந்த இரட்டையர் சகோதரிகளுக்கு காவல் உதவி ஆய்வாளர் பதவி கிடைத்துள்ளது. கணவர் இறந்த போதிலும் தன்னந்தனியாக தனது நான்கு குழந்தைகளையும் பாக்கியம்மா வளர்த்துள்ளார்.
அதில் இருவருக்கு ஏற்கனவே திருமணம் செய்துவைத்துள்ளார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில், மது வெற்றிபெற்றார். இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் வெற்றிபெற்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.