கர்நாடக மாநிலம், சிவமொக்கா (மாவட்டம்) தாலுகா அப்பலகெரே கிராமம் அருகே ஹுனசூரு கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் அருகே ரயில் தண்டவாளத்திற்கு தேவையான கற்களை உடைக்கும் கல்குவாரி ஒன்று அமைந்திருக்கிறது.
நேற்றிரவு (ஜன.21) அந்த கல்குவாரிக்கு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு, ரயில்வே கிரசர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் லாரியில் இருந்த வெடி பொருட்கள் அனைத்து வெடித்தும் சிதறின. லாரியும் வெடித்து சிதறி சுக்கு நூறாகியது.
இந்த விபத்தில், ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தைச் சுற்றியுள்ள பல வீடுகள் சேதமடைந்தன. இரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிவமொக்கா, சிக்கமகளூரு, உத்தர கன்னடா,தாவன்கேரே உள்ளிட்ட பகுதிகளும் பாதிக்கப்பட்டன. புறநகரில் உள்ள குவாரிக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட ஜெலட்டின் குச்சிகள், டைனமைட் வெடித்ததால், இந்தப் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதாக, சிவமொக்கா மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியது.