கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சிவக்குமார், சட்டவிரோத பணப்பரிவர்த்தணை முறைகேடு வழக்கு தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து அம்மாநிலம் முழுவதும் அவரின் கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் தழுவிய பந்தை முன்னெடுத்தனர், அதில் சிவக்குமார் ஆதரவாளர்கள் சிலர் அரசு பேருந்துகளை எரித்தும், பொதுமக்கள் சொத்துகளுக்கு பங்கம் விளைவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சிவக்குமாருக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டத்தில், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் எச்.டி. குமாரசாமிக்கு அழைப்பு விடுக்கப்படாததால், அப்போராட்டத்தில் ஆதரவு கரம் நீட்டும் வகையில் தன் கட்சியினரை பங்குகொள்ளுமாறு அறிவறுத்தியதாக குமாரசாமி தெரிவித்தார். மேலும் தமக்கு முறையாக அழைப்பு விடுத்திருந்தால் நிச்சயமாக கலந்து கொண்டிருப்பேன் என்று அவர் தெரிவித்தார்.
கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதலமைச்சராக இருந்தபோது சிவக்குமார் அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.