சிவ சேனா நிறுவனர் பால்தாக்கரேவால் தொடங்கப்பட்டது சாம்னா பத்திரிகை. மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையோடு வெற்றிபெற்றதை தொடர்ந்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பற்றி மோடிக்கு நினைவுபடுத்தியிருக்கிறது சாம்னா பத்திரிகை.
மோடிக்கு ராமர் கோயிலை நினைவுபடுத்திய சிவ சேனா! - ராமர் கோயில்
மும்பை: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பற்றி மோடிக்கு சிவ சேனாவின் சாம்னா பத்திரிகை நினைவுபடுத்தியிருக்கிறது.
இது குறித்து அப்பத்திரிகை, மக்களவைத் தேர்தலின் வெற்றி என்பது ராம ராஜ்ஜியத்தை விரும்பும், ராமர் கோயில் கட்ட விரும்பும் மக்களாலேயே சாத்தியமானது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ராமர் கோயில் கட்டுவதை வலியுறுத்தியுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கான கரசேவகர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்கள் சிந்திய ரத்தம் வீணாகக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மோடி பதவியேற்கும் வியாழக்கிழமை, ராமர் முடிசூட்டிய கிழமை என குறிப்பிட்டு எழுதியுள்ளனர்.