தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ராமர் கோயில் கட்டுவதை எவராலும் தடுக்க முடியாது'

லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

usdhav

By

Published : Jun 16, 2019, 1:43 PM IST

இது குறித்து அயோத்தியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தாக்கரே, கூடிய விரைவில் ராமர் கோயில் கட்டப்படும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றும், அது குறித்து பிரதமர் மோடி தலைமையில் செயல்படும் வலிமையான பாஜக அரசு முடிவெடுக்குமேயானால், அதனை யாராலும் தடுக்க முடியாது எனக் கூறினார்.

1992ஆம் ஆண்டு பாபர் மசூதியை இடிப்பதற்கு சிவசேனா கட்சியினர் உதவியது போல், ராமர் கோயில் கட்டுவதற்கும் உதவுவார்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, தேவைப்பட்டால் அது நடக்கும் என அதிரடியாக தெரிவித்தார்.

"நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், நானும், சிவசேனாவின் 18 எம்.பி.க்களும் ராம் லாலாவின் தரிசனம் பெறவந்தோம். இந்நகரத்துக்கு மீண்டும் வருவேன்" என உத்தவ் தாக்ரே கூறினார்.

மகன், எம்.பி.க்களுன் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே
முன்னதாக, தனது மகன் ஆதித்யா தாக்கரேவுடன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 18 சிவசேனா மக்களவை உறுப்பினர்களுடன் இன்று காலை, ராம் லாலா கோயிலில் வழிபாடு நடத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details