அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி தனிநபர் இடைவேளியுடன் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கின. இதற்காகக் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஸ்ரீராம் ஜென்ம பூமி தீர்த ஷேத்திரா அறங்காவலர் குழு அயோத்தி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றுள்ளது.
கோயில் கட்டுமானத்தின் பணிகளின் ஒருபகுதியாக அங்கு பழைய கட்டுமானங்கள் நீக்கப்பட்டு, அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அகழ்வாய்வின்போது அங்கிருந்து சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கோயில் அறங்காவலர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கண்டெடுக்கப்படும் தொன்மையான சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ன
இதையும் படிங்க:விமான பயணிகளுக்கான விதிமுறைகள் வெளியீடு!