தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா - சீனா உறவு குறித்து முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன்

டெல்லி: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான உறவு குறித்து முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மூத்தப் பத்திரிகையாளர் ஒருவருக்கு நேர்காணலில் பதிலளித்துள்ளார்.

shiv-shankar-menon

By

Published : Oct 16, 2019, 11:11 PM IST

அப்போது, சிவசங்கர் மேனன் கூறுகையில், "பிரதமர் மோடிக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான இரண்டாவது உச்சிமாநாடு இரு நாடுகளின் திட்டமிட்ட செயல் கிடையாது. இரு நாட்டினரும் தங்களின் சுமுக உறவை வெளிப்படுத்தவே இந்த உச்சிமாநாடு நடைபெற்றது.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு சீன எதிர்ப்பு தெரிவித்தாக பாகிஸ்தான் அரசு சீன அதிபர் உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு தெரிவித்தது. இதனால், சீனா இரு தரப்பினருக்கும் தாங்கள் பொதுவானவர்களே என்பதைக்காட்ட விரும்பியதன் விளைவாகத்தான் இந்த உச்சிமாநாடு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பை பொறுத்தவரை, இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பற்றாக்குறை, அதற்கான பிரச்னைகள், அதை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இச்செயல் இரு நாட்டின் பொருளாதாரம் முன்னோக்கிச் செல்ல உதவியாக இருக்கும்.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரின் சந்திப்பைப் பொறுத்தவரை இருதரப்பினரும் பொருளாதார உறவை வழங்கவே எதிர்பார்க்கிறார்கள் என நான் நினைக்கிறேன். இரு தலைவர்களும் தனிப்பட்ட உரையாடலில் என்ன பேசினார்கள் என்பது எனக்குக் தெரியாது.

இழந்த உறவை சீனா, இந்தியாவில் மீண்டும் கொண்டுவர முயற்சிப்பதாக அவர்கள் தெரிவிக்க விரும்புகிறார்கள். ஆனால் அதில் இந்தியாவிற்கு கவனம் தேவை, சீனாவில் ‘சொற்களைக் கேளுங்கள், ஆனால் நடத்தையைப் பாருங்கள்’ என்ற பழமொழி உண்டு. இது மோசமானதல்ல, இந்தியா - சீனா உறவுகளுக்கு இது சரியாகப் பொருந்தும் விதி" என்றார்.

இதையும் படிங்க:

சவுதி - ரஷ்யா இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்து

ABOUT THE AUTHOR

...view details