மும்பை: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா போட்டியிடுகிறது.
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் மூத்தத் தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத் ஞாயிற்றுக்கிழமை (ஜன.17) அறிவித்தார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “இது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட செய்தி. மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா போட்டியிடுகிறது. தலைவர் உத்தவ் தாக்கரே உடன் நடந்த சந்திப்புக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் கொல்கத்தாவை விரைவில் வந்தடைவோம். ஜெய் ஹிந்த்.” எனத் தெரிவித்துள்ளார்.