தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பயங்கரவாதத்தை ஒழிக்க நேரமோ, காலமோ தேவையில்லை - சிவசேனா பதிலடி! - congress

மும்பை: பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள நேரமோ, காலமோ தேவையில்லை என, சிவசேனா கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

உத்தவ் தாக்கரே

By

Published : May 3, 2019, 4:11 PM IST

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் சமீபத்தில் அறிவித்தது.

இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என பல அரசியல் கட்சி தலைவர்களும் இந்த அறிவிப்பை வரவேற்றனர். இந்நிலையில், மத்தியப்பிரதேச முதலமைச்சர் கமல் நாத், மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்புவதாக கூறினார். கமல்நாத்தின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாமனாவில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது.

அதில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள நேரமோ, காலமோ தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேரத்தை பற்றி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்த ஐநாவிடம் தான் கேட்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details