தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியரசுத் தலைவர் ஆட்சியை நோக்கிச் செல்கிறதா மகாராஷ்டிரா? - மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி

மும்பை: எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராத நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை நோக்கி மகாராஷ்டிரா செல்கிறதா எனக் கேள்வி எழுந்துள்ளது.

Maharashtra

By

Published : Nov 8, 2019, 9:20 AM IST

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆன நிலையில், கூட்டணி கட்சிகளான பாஜக-சிவசேனா இடையே தொடர் மாற்று கருத்து நிலவிவருகிறது. தங்கள் கட்சியிலிருந்துதான் முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என இரு கட்சிகளும் தொடர்ந்து கருத்து தெரிவித்துவருகின்றன.

தற்போதுள்ள மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 9ஆம் தேதியுடன் முடிவடைவதால், அதற்கு முன்பு ஆட்சி அமைத்திட வேண்டும். எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தலுக்கு முன்பாகவே கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக-சிவசேனா ஆட்சி அமைக்க முன்வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன.

இம்மாதிரியான பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சிவசேனா கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நட்சத்திர விடுதியில் நேற்றிலிருந்து தங்கவைக்கப்பட்டுள்ளனர். மற்ற கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் வளைப்பதற்காக பாஜக முயன்றுவருவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட நிலையில், சிவசேனா கட்சியின் இந்தச் செயல் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

தங்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களை பாஜக தனது பக்கம் இழுக்க முயன்றுவருவதாக தேசியவாத காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. நவம்பர் 9ஆம் தேதிக்குள் ஆட்சி அமைக்காவிட்டால், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அயோத்தியாவில் பாதுகாப்பு அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details