தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிதி முறைகேடு வழக்கில் சிவ சேனா எம்எல்ஏவுக்கு சம்மன்! - அமலாக்கத்துறை இயக்குநரகம்

மும்பை: நிதி முறைகேடு வழக்கில் சிவ சேனா எம்எல்ஏவுக்கும் அவரது மகனுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

By

Published : Dec 1, 2020, 4:19 PM IST

தனியார் நிதி நிறுவன முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் சிவ சேனா சட்டப்பேரவை உறுப்பினர் பிரதாப் சர்நாயக் மற்றும் அவரது மகன் விஹங் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தனியார் நிதி நிறுவனம், டாப் செக்யூரிட்டி குழுமம், பிரதாப் ஆகியோருக்கிடையே சந்தேகத்திற்கு இடமான வகையில் நிதி பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான ஆதாரங்கள் அமலாக்கத்துறையினரிடம் கிடைத்துள்ளன.

நிதி முறைகேடு தொடர்பாக, கடந்த நவம்பர் 24ஆம் தேதி சோதனை நடைபெற்றது. அப்போது, பெருந்தொற்று காரணமாக பிரதாப் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இதற்கிடையே, பிரதாப்பின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் அவரது மகன் விஹங்கை அமலாக்கத்துறையினர் ஐந்து மணி நேரத்திற்கு விசாரணைக்குட்படுத்தினர்.

விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த நாள் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவருக்கு மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டது. இருந்தபோதிலும், அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகாமல் இருந்தார். இவ்வழக்கு தொடர்பாக, பிரதாப்பின் நெருங்கிய நண்பரான அமித் சந்தோலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details