தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமலாக்கத் துறை முன் ஆஜரான சிவசேனா எம்எல்ஏ - மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம்

பணமோசடி வழக்கில் தொடர்புடைய சிவசேனா எம்எல்ஏ பிரதாப் சர்நாயக் இன்று அமலாக்கத் துறை முன் ஆஜரானார்.

அமலாக்கத் துறை முன் ஆஜரான சிவசேனா எம்எல்ஏ
அமலாக்கத் துறை முன் ஆஜரான சிவசேனா எம்எல்ஏ

By

Published : Dec 10, 2020, 3:25 PM IST

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் ஓவாலா மஜ்வாடா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பிரதாப் சர்நாயக்(56). சிவசேனா கட்சியின் பிரதான பேச்சாளரான இவர் மீது, மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணைய திட்டங்களுக்காக பாதுகாப்பு காவலர்களை நியமிப்பதில் டாப்ஸ் குழும பாதுகாப்பு சேவை நிறுவனத்துடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையடுத்து, பாதுகாப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், சர்நாயக்கின் நண்பர் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த வழக்கில், கடந்த மாதம் அமலாக்கத் துறை பிரதாப் சர்நாயக் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றுள்ள சர்நாயக் இன்று விசாரணைக்காக காலை 11 மணியளவில் பல்லார்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள மத்திய விசாரணை முகமை அலுவலகத்திற்கு விரைந்தார்.

இதையும் படிங்க: பண மோசடி வழக்கு: சிவசேனா எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக்கின் நெருங்கிய உதவியாளர் கைது!

ABOUT THE AUTHOR

...view details