தீபாவளி பண்டிகையை கொண்டாடும்விதமாக மும்பையில் உள்ள சிவசேனா தலைமை அலுவலகமான ‘சேனா பவன்’ வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.இந்தக் கட்டிடம் முழுவதும் ஆரஞ்சு, பிங்க் நிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சாலையோரம் இந்த கட்டிடம் அமைந்துள்ளதால் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் வண்ண மின்விளக்குகளால் கண்ணை பறிக்கும் சிவசேனா கட்டிடத்தை பார்த்து ரசித்துச் செல்லகின்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே வொர்லி தொகுதியில் வெற்றிபெற்றுள்ளதால் இந்த தீபாவளி இன்னும் சிறப்பான தீபாவளியாக சிவசேனாவுக்கு அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.