தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 2, 2020, 6:30 PM IST

ETV Bharat / bharat

மசூதிகளில் ஒலிப்பெருக்கி பயன்பாட்டுக்குத் தடைவிதிக்க வேண்டும் - சிவசேனா கோரிக்கை

ஒலி மாசுப்பாட்டை தடுத்த மசூதிகளில் ஒலிப்பெருக்கி பயன்பாட்டுக்குத் தடைவிதிக்க வேண்டும் என சிவசேனா கட்சி மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது.

ஒலி பெருக்கி பயன்பாடு
ஒலி பெருக்கி பயன்பாடு

மும்பை (மகாராஷ்டிரா):ஒலி மாசுபாட்டைத் தடுக்கும்வகையில் மசூதிகளில் ஒலிப்பெருக்கி பயன்பாட்டுக்குத் தடைவிதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா கட்சியின் பத்திரிகையான 'சாம்னா'வில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.

அக்கட்சியின் மும்பை தென் மண்டலத் தலைவர் விபாக் பிரமுக் சக்பல், இஸ்லாமிய குழந்தைகளுக்காக ஒப்புவித்தல் போட்டியை நடத்தலாம் எனக் கருத்து கூறியது சர்ச்சையான நிலையில், இவ்வாறு தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தத் தலையங்கத்தில், "விபாக்கின் கருத்தினை பாஜக விமர்சிப்பது, டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என விமர்சிப்பதற்கு ஒப்பாகும்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அனைவரும் நாட்டின் முன்னாள் வீரர்கள் ஆவர். அவர்களின் பிள்ளைகள்தான் இன்று நாட்டின் எல்லையினைப் பாதுகாத்துவருகின்றனர்.

விவசாயிகளை பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பவர்களிடமிருந்து எதை எதிர்பார்க்க முடியும். சிவசேனா இந்துத்துவாவை கைவிட்டுவிட்டதாகவும், பாஜகவினர் ஈகை பண்டிகையின் விருந்தினை மட்டும் புசித்துவருவதாகவும் சிலர் விமர்சித்துவருகின்றனர். நாட்டில் உள்ள 22 கோடி இஸ்மியர்கள் இந்தியக் குடிமகன்கள் என்ற காரணத்தால் இதனை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "பாஜக ஆளும் கோவா மற்றும் தென் கிழக்கு மாநிலங்களில் பசுக்கறியை உண்பது என்பது சட்டப்பூர்வமானது என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில், பசு கொலைக்கு எதிராகச் சட்டங்கள் இயற்றுவதை, வாக்கு வங்கிக்காகச் செய்த செயல் என்று கூறாமல் வேறு எவ்வாறு கூற முடியும்.

அதேபோல், மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து வீட்டில் இருந்தபடியே கொண்டாட்டங்களைத் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்துவற்காகவே சிவேசேனா பிரமுகர் சக்பல் இஸ்லாமிய குழந்தைகளுக்காக ஒப்புவித்தல் போட்டியை நடத்தலாம் என்ற கருத்தினைத் தெரிவித்தார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வார்த்தைகளாலும், உடலளவிலும் பெண்களை துன்புறுத்திய மதகுருக்கள்!

ABOUT THE AUTHOR

...view details