மகாராஷ்டிரா மாநிலம், அகமதுநகர் மாவட்டத்தில் புகழ்பெற்ற சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியான சாய்பாபாவை நினைவு கூரும் விதத்தில், அவர் பிறந்த இடமாகக் கருதப்படும் சீரடியில் இந்தக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்து இஸ்லாமியர்களின் ஒற்றுமையைக் கற்பித்த சாய்பாபாவுக்கு நாடெங்கிலும் பக்தர்கள் பலர் உள்ள நிலையில், சீரடி இந்தியாவின் முக்கிய ஆன்மிகத் தலமாக விளங்குகிறது.
அண்மையில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவியேற்ற உத்தவ் தாக்கரே சாய்பாபா பிறப்பிடம் குறித்து கூறியுள்ள கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சாய்பாபா பிறந்த இடம் சீரடி என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல் எனவும், அவர் பிறந்தது மகாராஷ்டிராவில் உள்ள பர்பானி என்ற பகுதியாக இருக்கவே வாயப்புகள் அதிகம் எனவும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.