மத்திய அரசின் கப்பல் துறை அமைச்சகத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் சற்று தொய்வாகவும், மக்களால் எளிதில் உபயோகிக்க முடியாத நிலையிலும் உள்ளதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு, இந்திய அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத் துறையினர் (Department of Administrative Reforms and Public Grievances ) இந்திய அரசு வலைத்தளங்களுக்கான வழிகாட்டுதல்களின்படி கப்பல் துறை அமைச்சகத்தின் இணையதளத்தை புதுப்பித்து வடிவமைத்துள்ளனர்.
புதுப்பிக்கப்பட்ட கப்பல் துறை அமைச்சகத்தின் இணையதளம் - இந்திய அரசாங்கத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள்
டெல்லி: மத்திய கப்பல் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சில மாற்றங்கள் செய்து புதுப்பித்து வெளியிட்டுள்ளனர்.
்ே்ே்ே
இந்த இணைதளத்தின் முகப்புப்பக்கத்தில் அனிமேஷன் மூலம் சிறப்பு வாய்ந்ததாகவும், சிறந்த வீடியோ பதிவேற்ற வசதியுடன் சமூக ஊடக ஒருங்கிணைப்பையும் (social media integration) இணைத்துள்ளனர். இந்த இணையதளம் ஏப்ரல் 30ஆம் தேதி மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:30 ஆண்டுகளில் முதல்முறையாக காட்சியளித்த இமயமலை!